இனி குப்பை கொட்டினால் தப்ப முடியாது.கோவை செப்டம்பர் 16 கோவையில் உள்ள 100 வார்டுகளில் குப்பைகளை வீடு வீடாக வாங்க தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் .இதனால் பொது இடங்களில் குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டுள்ளன. குப்பைத்தொட்டிகள் அகற்றப்பட்ட பகுதிகளில் மீண்டும் குப்பைகள் கொட்டப்படுகிறது. அது சாலையோரங்களாகவும் உள்ளதால் சுகாதார சீர் கேடுஏற்படுகிறது. இதனை தடுக்கமாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:- மீண்டும் மீண்டும் குப்பை கொட்டும் இடங்கள் 440 ஹாட்ஸ்பாட்டுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் சூரிய ஒளியில் இயங்கும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.ஒவ்வொரு இடத்திலும் குறைந்தபட்சம் ரூ. 15 ஆயிரம்இதற்காக செலவிடப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமரா 15 வாட் சோலார் பேனல் ,4ஜி சிம் கார்டு மெம்மரி கார்டு உள்ளிட்டவை இவற்றில் பொருத்தப்பட்டுள்ளது. வாகனங்களில் வந்து பொது இடங்களில் குப்பை கொட்டினால் கண்காணிப்பு கேமரா மூலம் வாகனங்களின் பதிவு எண்ணை கண்டறிந்து அதன் அடிப்படையில்குப்பையின் எடைக்கு தகுந்தவாறு ரூ. 500 முதல் ரூ 2 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. குப்பைகள் அதிகம் போடப்படும் பகுதிகளை வலையால் மூடவும், எச்சரிக்கை பலகைகள் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குப்பை தேங்கும் ஹாட்ஸ்பாட் களில் தூய்மையை பராமரிக்க சுகாதார ஆய்வாளர்கள் கேமராக்கள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அறிந்து அந்த பகுதிகளிலும் வாகனம் மூலம் குப்பைகளைஅகற்றவும், தவறினால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது .தனி நபர்கள் குப்பை கொட்டினால் எந்த பகுதியில் இருந்து குப்பைகளை கொட்டுகிறார்கள்? என்று ஆய்வு செய்து அங்கு சுகாதார பணிகளை தீவிரபடுத்தவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர். கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதால்பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்கள் இனிமேல் தப்ப முடியாது என்கிற நிலை ஏற்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0