தமிழக வியாபாரிகள் சம்மேளன செயற்குழு கூட்டம்

தலைவர் எஸ் .எம் . பி . முருகன் தலைமையில் நடந்தது.கோவை செப்11 . தமிழக வியாபாரிகள் சம்மேளன செயற்குழு கூட்டம்வடவள்ளியில் உள்ள சம்மேளனமண்டபத்தில்நேற்று நடந்தது.கூட்டத்துக்கு தலைமை தலைவர் எஸ் எம் பி முருகன் தலைமை தாங்கினார்.பொதுச்செயலாளர் உதயகுமார்,பொருளாளர் சிலுவை முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில்புதிய உறுப்பினர்கள்சேர்ப்பது, சம்மேளனஅனைத்து கிளைகள் சார்பில் ஆண்டுதோறும் விழா நடத்தி நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும், .வியாபாரிகளுக்கு ஏற்படும் இன்னல்களை களைவதற்கு ஒன்றுபட்டு செயல்படவேண்டும்.தலைமை மற்றும் கிளை நிர்வாகிகள் அந்தந்த பகுதிகளில் பொதுமக்களுக்கு ஏற்படும்குறைகளை கண்டறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.வியாபாரிகள் நலனில் முழு கவனம் செலுத்த வேண்டும்.உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. . கூட்டத்தில் சிங்காநல்லூர் கிளை புதிய செயலாளராக தேர்ந்தெடுக்கபட்ட ராஜேந்திரனுக்கு தலைவர் எஸ்.எம். பி முருகன் சால்வை அணிவித்து பாராட்டினார் இந்த கூட்டத்தில் தலைமை கமிட்டிதுணைத் தலைவர்கள் பூரண சந்திரன் ஜெ. எம்.ஜேக்கப்,தேவராஜ்,பால்ராஜ்,செயலாளர்கள் சுடலைமணி சூலூர். ஏ. குணசிங்,பாலகிருஷ்ணன்மற்றும் அனைத்து கிளை நிர்வாகிகள் போத்தனூர் முருகன்,சேகர், ஜார்ஜ் சபாபதி ,சேவியர் ராஜா, ராஜமாணிக்கம், குணசிங், சாமுவேல்,வெள்ளலூர் ராஜேந்திரன், உட்படகலந்து கொண்டனர்.அனைவருக்கும் அசைவ விருந்து வழங்கப்பட்டது.