வீட்டில் பூட்டை உடைத்து 12 பவுன் நகைகள் திருட்டு

கோவை அக்டோபர் 14 கோவை சிங்காநல்லூரில் உள்ள ஒரு தனியார் அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் செந்தில்குமார் ( வயது 42) இவருக்கு சொந்தமான ஒருவீடு காளப்பட்டி ரோடு டெக்ஸ் பார்க்கில் உள்ளது. பூட்டி கிடந்த அந்த வீட்டில் யாரோநள்ளிரவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த 12 பவுன் தங்க நகைகளை திருடி சென்று விட்டனர் .இது குறித்து செந்தில்குமார் பீளமேடு போலீசில் புகார் செய்தார்.சப்- இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.