பைக்குகள் நேருக்கு நேர் மோதி ஒருவர் பலி – மற்றொருவர் படுகாயம்..

கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள ஓசூர் பஜனை கோவில் வீதியை சேர்ந்தவர் சந்திரசேகர் ( வயது 53) இவர் நேற்று சரவணம்பட்டி சத்தி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு பைக்கும் இவரது பைக்கும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் படுகாயம் அடைந்த சந்திரசேகர் அதே இடத்தில் இறந்தார். பைக்கில் பின்னால் இருந்த அமிதிஷ் படுகாயத்துடன் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ராஜேஷ் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக விநாயகபுரம்,வேளாங்கன்னி நகரைச் சேர்ந்த முருகன் ( வயது 55) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..