போலீஸ் குடியிருப்பில் தீ விபத்து. சப் இன்ஸ்பெக்டர் காயம்.

கோவை ஜூலை 3 கோவை போலீஸ் பயிற்சிபள்ளி மைதான வளாகத்தில் போலீஸ் குடியிருப்பு உள்ளது. இங்குஆயுத படையில்சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் குமரேசன் குடியிருந்து வருகிறார். அவர் தனது வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது மின் கசிவு காரணமாக திடீரென்று வீட்டில் தீப்பிடித்தது .இது குறித்து தகவல் அறிந்ததும்தெற்கு பகுதி தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர் இந்த தீபத்தில் குமரேசனுக்கு லேசான காயம் ஏற்பட்டது அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்..