கோவை எல் அண்டு டி பைபாஸ் ரோட்டில் 5 சுங்கச்சாவடிகள் மூடல்

கோவை ஆகஸ்ட் 2 கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலைகுறைக்கும் விதமாக கோவை அவினாசி ரோட்டில் உள்ள நீலாம்பூர் முதல் கேரளா செல்லும் சாலையில் உள்ள மதுக்கரை வரை 28 கிலோமீட்டர் தூரத்திற்கு கடந்த 1999 -ஆம் ஆண்டு பைபாஸ் சாலை எல். அண்டு ,.டி. நிறுவனத்தால் இருவழிச்சாலையாக அமைக்கப்பட்டது. தற்போது வாகனப்பெருக்கம் அதிகரித்து உள்ளதால் இந்த இருவழிச் சாலைப் பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது .எனவே இதனை சர்வீஸ் சால லையுடன் கூடிய 6 வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இந்த சாலை ரூ 1200 கோடியில் விரிவாக்கம் செய்ய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கிடையே எல் அண்டு டி பைபாஸ் சாலையில் நீலாம்பூர் முதல் மதுக்கரை வரை உள்ள 6 சுங்கச்சாவடிகளில் 5 சுங்கச்சாவடிகள் நிரந்தரமாக மூடப்படும் என்றும் மதுக்கரையில் உள்ள ஒரே ஒரு சுங்கச்சாவடியில் மட்டும் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்தது .இந்த அறிவிப்பு நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது.இதனால்வாகனங்களுக்கு குறைந்தபட்சம் ரூ 100 முதல் ரூ.500 வரை மிச்சம் ஆகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.