ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹாவில் மஹான் குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராஹிம் ஷஹீத் ஒலியுல்லாஹ் அடங்கப் பெற்றுள்ளார். இத்தர்ஹாவில் ஒவ்வொரு ஆண்டும் மத நல்லிணக்கத்திற்கான சந்தனக்கூடு விழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம்.இந்நிலையில் 851ம் ஆண்டு சந்தனக்கூடு எனும் மதநல்லிணக்க விழா இந்த ஆண்டு விழாவின் முதல் நிகழ்ச்சியாக ஏப்.29ம் தேதி தொடங்குகிறது. இந்த மவ்லிது ஷரீப் தர்ஹா மண்டபத்தில் மார்க்க அறிஞர்களால் தொடர்ந்து 23 நாட்களுக்கு ஓதப்படுகிறது.இதைத் தொடர்ந்து மே 9ம் தேதியான இன்று பாதுஷா நாயகத்தின் பச்சை வர்ணக் கொடி யானை,ஒட்டகத்தின் மேல் வைத்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கொடியேற்றத்துடன் துவங்கியது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0