கோவை, தடாகம்பக்கம் உள்ள தண்ணீர் பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் அசோக் குமார் ( வயது 45) இவர் கோவை வன கோட்டத்தில் வனக்காப்பாளராக பணியாற்றி வந்தார். அசோக்குமார் கடந்த 10 – ந் தேதி பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட தோளம்பாளையம் வனப்பகுதியில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டெருமை அசோக்கு மாரை முட்டி தூக்கி வீசியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார். அவரது சத்தம் கேட்டு வந்த அந்த பகுதியினர் மற்றும் வனப்பணியாளர்கள் உடனடியாக அவரை மீட்டு சீலியூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது .மேல் சிகிச்சைக்காக கோவைஅரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் அசோக்குமார் நேற்று இறந்தார். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் பெரியநாயக்கன்பாளையம் வனச்சரக அலுவலர் சரவணன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0