அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஆசிரியையிடம் ரூ. 6.72லட்சம் மோசடி

கோவை ஆகஸ்ட் 5 கோவை ஈச்சனாரி பக்கம் உள்ள மாச்சே கவுண்டன் பாளையம்,எலைட் கார்டனை சேர்ந்தவர் சத்ய நாராயணா. இவரது மனைவி ராஜேஸ்வரி ( வயது 30) எம். எஸ் .சி, பி. எட் பட்டம் பெற்றுள்ளார் இவர் ஒத்தக்கால் மண்டபத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஆர். எஸ். புரம் சிரியன் சர்ச் ரோட்டை சேர்ந்த மணி என்பவர் அறிமுகம் ஆனார் .இவர் ராஜேஸ்வரிக்கு அரசு பள்ளியில் வேலை வாங்கித் தருவதாக கூறினார்.இதை நம்பி ராஜேஸ்வரி அவரிடம் ரூ 10 லட்சம் கொடுத்தாராம்.பல மாதங்களாகியும் வேலை எடுத்துக் கொடுக்கவில்லை. இந்த நிலையில் ராஜேஸ்வரி பணத்தை திருப்பி கேட்டார் .அப்போது அவர் ரூ.1,27,350 மட்டும் திருப்பி கொடுத்துவிட்டு மீதி ரூ6 லட்சத்து 72 ஆயிரத்து650 ரூபாயை கொடுக்காமல் மோசடி செய்து விட்டார் .இது குறித்து ராஜேஸ்வரி ஆர் எஸ் புரம் போலீசில் புகார் செய்தார் .இன்ஸ்பெக்டர்செந்தில்குமார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து மணியை தேடி வருகிறார் .இவர் மீது மோசடி உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.