போதை மாத்திரைகளுடன் 4 பேர் கைது

கோவை செப்டம்பர் 11 கோவை சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், சப் இன்ஸ்பெக்டர் தினேஷ் குமார் ஆகியோர் நேற்று சரவணம்பட்டி – துடியலூர் ரோட்டில் உள்ள ஒரு ஜெராக்ஸ் கடை முன்நேற்று மாலை சந்தேக படும் படி நின்று கொண்டிருந்த ஒரு கும்பலை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் குஷ்மற்றும்மெத்த பெட்டமின், என்ற போதை பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன .இது தொடர்பாக அந்த கும்பலைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் கணபதி வி.என்.எஸ். நகரை சேர்ந்த அமர்நாத் ( வயது 25) மணியக்காரன் பாளையம், மாணிக்கவாசகர் நகர் கதிர்வேல் ( வயது 23) கோவில் மேடு வ. உ . சி. நகர், தஸ்வந்த் ( வயது 20) மணியக்காரன் பாளையம் மாணிக்கவாசகர் சக்தி முகேஷ் (வயது 20 )என்பது தெரியவந்தது.இவர்கள் 4பேரும் கைது செய்யப்பட்டனர். அஸ்வின் என்பவர் தப்பி ஓடிவிட்டார்.இவரை தேடி வருகிறார்கள்.