கோவை ஆகஸ்ட்28 விநாயகர் சதுர்த்தியை யொட்டி இந்து முன்னணி இந்து மக்கள் கட்சி ( தமிழகம் )பாரத் சேனா உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் மாநகர பகுதியில் 722 சிலைகளும் புறநகர் பகுதிகளில் 1,680 சிலைகளும் என மொத்தம் 2,402 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இந்து சிலைகளுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்து முன்னணி சார்பாக ரத்தினபுரி சாஸ்திரி ரோட்டில் ரூ 10 பத்து லட்சம் ரூபாய் நோட்டுக்களால் 9 அடி விநாயகருக்கு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்..இதில் இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை தரிசனம் செய்தனர் .இந்து மக்கள் கட்சி சார்பில் ராஜவீதி தேர்நிலை திடல் பகுதியில் மலேசியாவில் உள்ள கோலாலம்பூர், மகா மாரியம்மன் கோவில் ராஜகோபுரம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.அங்கு ஆறு படை வீடு முருகன், கோனியம்மன், தண்டுமாரியம்மன், உருவப்படங்கள் வைக்கப்பட்டு 10 அடி உயரத்தில் விநாயகர் சிலை வைத்து சிறப்பு பூஜை நடந்தது. இதில் இந்து மக்கள் கட்சியினர் உள்பட பலர் பங்கேற்றனர்.பாரத் சேனா சார்பில் சிவானந்தா காலணியில் 10 அடி உயர வெற்றி விநாயகர் சிலை வைக்கப்பட்டு பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.கோவை மாநகரில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வைத்திருந்த 20 விநாயகர் சிலைகள் நேற்று குறிச்சி குளம், குனியமுத்தூர் குளம், சிங்காநல்லூர் குளங்களில் கரைக்கப்பட்டன.கோவை மாநகரில் விநாயகர் சதுர்த்தியை யொட்டி அமைக்கப்பட்டுள்ள சிலைகளில் நாளை ( வெள்ளிக்கிழமை) 418 சிலைகளும் 31- ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை) மீதமுள்ள 304 சிலைகளும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்படுகிறது. இதையொட்டிமாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0