மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் அரசு பஸ் கண்ணாடி உடைப்பு. வாலிபர் கைது

கோவை ஜூலை 22 கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில்ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு வந்த அரசு பஸ் நின்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் பயணம் செய்த ஒருவர்குடிபோதையில் வழியை மறித்து நின்று கொண்டிருந்தார். அவரை நகர்ந்து நிற்குமாறு பஸ் டிரைவர் வினோத் கங்காதரன் கூறினார். அதற்கு மறுத்த அந்த ஆசாமி கீழே இறங்கி, தகாத வார்த்தைகளால் பேசிபஸ்சின் முன் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திவிட்டு ஓடிவிட்டார் .இது குறித்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் சம்பவ இடத்திற்கு சென்றுவிசாரணை நடத்தினார். இது தொடர்பாக ஊட்டி பக்கமுள்ள கல்லட்டி கிராமத்தைச் சேர்ந்த தர்மன் மகன் விக்னேஷ் ( வயது 34) கைது செய்யப்பட்டார் இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.