ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்காத அரசு பஸ்.!!

கோவை புலியகுளம், அம்மன் குளம்பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் ( வயது 45 )தூய்மை பணியாளர். இவர்கடந்த 2020-ம்ஆண்டு நவம்பர் மாதம் 22-ந் தேதி அவிநாசி ரோடுஅண்ணா சிலை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற போது அவர் மீது அரசு பஸ் மோதியது. இதில் அவரது வலது காலில் படுகாயம் ஏற்பட்டது. மருத்துவ சிகிச்சைக்கு பின் அவரது காலை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து விஜயகுமார் கோவை மோட்டார் வாகன விபத்துகளை விசாரிக்கும் கோர்ட்டில் இழப்பீடு வழங்க கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணை நடத்திய கோர்ட் அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்க கடந்த 2024 -ம் ஆண்டு உத்தரவிட்டது. வட்டியுடன் மொத்தம் ரூ. 25 லட்சத்தை வழங்க போக்குவரத்து கழகம் தாமதம் செய்தது .இதைத் தொடர்ந்து கோர்ட் உத்தரவை நிறைவேற்ற கோரும் மனுவை விஜயகுமார் தரப்பில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி இழப்பீடு வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்யுமாறு உத்தரவிட்டார் .இதை தொடர்ந்து கோவை காந்திபுரத்தில் இருந்து ஈஷா யோகா மையத்துக்கு செல்லும் அரசு பஸ்சை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து கோர்ட்டில் நிறுத்தினார்கள்.