இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் இருகூர் கிளை பாப்பம்பட்டி பகுதியில் அமைந்துள்ள குளத்தை தூர்வாரி சுத்தப்படுத்தி அதனை ஊராட்சி நிர்வாகிகள் இடம் ஒப்படைத்தது. இந்த பணிகள் தூய்மையாக இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டது.
தூய்மை இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக, இருகூரில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் , தனது சமூக நலப் பணிகளின் கீழ், கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பாப்பம்பட்டி ஊராட்சியில் உள்ள ஒரு குளத்தை சுத்தம் செய்யும் முக்கியமான பணியை வெற்றிகரமாக மேற்கொண்டது. இந்தப் பணியின் நிறைவாக, சுத்தம் செய்யப்பட்ட குளம் செவ்வாய்க்கிழமை பாப்பம்பட்டி ஊராட்சி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
பாப்பம்பட்டி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழாவில், எச் பி சி எல் நிறுவனத்தின் மூத்த நிர்வாகியும், தலைமை மேலாளருமான பிரவீன் குமார் தலைமையேற்று, குளத்தை ஊராட்சிக்கு ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சியில் பாப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களான ஸ்ரீதர் தரணி மற்றும் ஞானசேகரன் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
இந்த முயற்சி, கிராமப்புற நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்கும், சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கும் எச் பி சி எல் ன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியது. சுத்தம் செய்யப்பட்ட குளம், உள்ளூர் விவசாயிகளுக்கும், கிராம மக்களுக்கும் நீர்ப்பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற உள்ளூர் ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் விவசாய சமுதாயத்தினர், எச் பி சி எல் இன் இந்த பங்களிப்பை பெரிதும் பாராட்டினர்.
இந்த முயற்சி, தூய்மை இந்தியா இயக்கத்தின் குறிக்கோள்களை மேலும் வலுப்படுத்துவதாக அமையும்.