அசாம் மாநிலம் நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிதான் ஹசாரிகா (வயது 23)இவரது மனைவி ஜிந்தி .இவர்கள் கோவை கணபதி சின்னச்சாமி நகர் 3 -வது வீதியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். பிதான் ஹசாரிகா அத்திப்பாளையம் பிரிவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பிளம்பராக வேலை பார்த்து வருகிறார்.. பிதான் ஹசாரிகா விற்கு வட மாநில பெண்களுடன் தொடர்பு இருந்து வந்ததாக தெரிகிறது. அவர் பெண்களுடன் உல்லாசமாக இருந்து வந்தார். தன்னுடன் தொடர்பில் இருந்த பெண்களுடன் அடிக்கடி வீடியோ கால் மூலம் பிதான் ஹசாரிகா பேசி வந்தார். கணவரின் செல்போனை வாங்கி பார்த்த மனைவி ஜிந்தி கணவரை கண்டித்தார் .ஆனால் அவர் பெண்களுடன் இருந்த தொடர்பை கைவிடவில்லை.. சம்பவத்தன்று ஜிந்தி வெளியில் சென்று இருந்த போது பிதான் ஹசாரிகா வீட்டிற்குஒரு இளம்பெண்ணை அழைத்து வந்து உல்லாசமாக இருந்தாராம். அப்போது வீட்டிற்கு வந்து ஜிந்தி இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் .அப்போது அந்த இளம் பெண் வீட்டை விட்டு ஓடிவிட்டார் .மற்றொரு பெண்ணை வீட்டில் அழைத்து வந்து உல்லாசமாக இருந்த கணவர் மீது ஜிந்திக்கு ஆத்திரம் ஏற்பட்டது. கணவரை கண்டித்ததால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது .அப்போது பிதான் ஹசாரிகா தனது மனைவி ஜிந்தியை சொந்த ஊரான அசாம் மாநிலத்துக்கு சென்று விடுமாறு மிரட்டினாராம். இந்த நிலையில் அக்கம்பக்கம் உள்ளவர்கள் 2 பேரையும் சமாதானம் செய்து வைத்தனர். இருந்தாலும் ஆத்திரம் அடங்காத ஜிந்தி கணவருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று முடிவு செய்தார். சம்பவத்தன்று வேலை முடிந்து பிதான் ஹசாரிகா மதுபோதையில் வீட்டுக்கு வந்தார். பின்னர் அறைக்குச் சென்று மது போதையில் படுத்து தூங்கினார். கணவர் மீது கோபத்தில் இருந்த ஜிந்தி சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து பிதரன் ஹசாரியாவின் மர்ம உறுப்பைதுண்டாக அறுத்து வீசினார் .இதனால் வலி தாங்க முடியாமல் அவர் கதறி துடித்தார். உடனே ஜிந்தி கணவரை அறையில் வைத்து பூட்டிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார். அறையில் இருந்து வெளியே வர முடியாத பிதான் ஹசாரிகா கத்தி கூச்சல் போட்டு அருகில் வசிப்பவர்களை உதவிக்கு அழைத்தார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து கதவை உடைத்து பிதான் ஹசாரியாவை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .இந்த சம்பவம் குறித்து சரவணம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் வழக்கு பதிவு செய்து கணவரின் மர்ம உறுப்பை அறுத்த ஜிந்தியை கைது செய்தார். பல பெண்களுடன் தொடர்பில் இருந்த கணவருக்கு மனைவி அளித்த நூதன தண்டனை கோவையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0








