சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்கனவே ஒரு லட்சத்தை தாண்டிவிட்ட நிலையில், இன்று காலையிலேயே சவரனுக்கு 1,600 ரூபாய் உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்ச விலையை எட்டியுள்ளது.
இதனால், பொதுமக்கள் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளனர். தங்கத்தின் தற்போதைய விலை என்ன என்பதை பார்க்கலாம்.
தங்கத்தின் விலை கடந்த 15-ம் தேதி ஒரு லட்சம் ரூபாயை எட்டிப்பிடித்து, பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. அன்று, ஒரு கிராம் 12,515 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1 லட்சத்து 120 ரூபாயாகவும் விற்பனையானது.
ஆனால், அதன் பிறகு விலை குறையத் தொடங்கிய நிலையில், 16-ம் தேதி ஒரு கிராம் 12,350 ரூபாய்க்கும், ஒரு சவரன் 98,800 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. 17-ம் தேதி சற்று விலை உயர்ந்து, ஒரு கிராம் 12,400 ரூபாய்க்கும், ஒரு சவரன் 99,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
18-ம் தேதி மேலும் விலை உயர்ந்து, ஒரு கிராம் 12,440 ரூபாய்க்கும், ஒரு சவரன் 99,520 ரூபாய்க்கும் விற்பனையானது. தொடர்ந்து, 19-ம் தேதி விலை குறைந்து, ஒரு கிராம் 12,380 ரூபாய்க்கும், ஒரு சவரன் 99,040 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
இந்நிலையில், வார இறுதியில் சற்று விலை உயர்ந்து, 20 மற்றும் 21-ம் தேதிகளில், ஒரு கிராம் 12,400 ரூபாய்க்கும், ஒரு சவரன் 99,200 ரூபாய்க்கும் விறபனை செய்யப்பட்டது. இந்த சூழலில் தான், 22-ம் தேதியான நேற்று ஒரே நாளில் 1,360 ரூபாய் விலை உயர்ந்து, புதிய உச்சத்தை அடைந்தது.
அதன்படி, நேற்று காலை கிராமிற்கு 80 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 12,480 ரூபாயை எட்டியுள்ளது. அதன்படி, சவரனுக்கு 640 ரூபாயை விலை உயர்ந்து, ஒரு சவரன் 99,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், பிற்பகலில் மீண்டும் சவரனுக்கு 720 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு சவரன் 1,00,560 ரூபாய்க்கும், கிராமிற்கு 90 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் தங்கம், 12,570 ரூபாய்க்கும் விற்பனையானது.
இந்நிலையில், தங்கத்தின் விலை இன்று காலையிலேயே சவரனுக்கு 1,600 ரூபாய் உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு சவரன் தங்கத்தின் விலை தற்போது 1,02,160 ரூபாயாக எகிறியுள்ளது. கிராமிற்கு 200 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் தற்போது 12,770 ரூபாயாக உள்ளது.
இதேபோல், வெள்ளியின் விலையும் தொடர்ந்து உயர்ந்து, புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த 15-ம் தேதி கிராம் 215 ரூபாய்க்கு விற்கப்பட்ட வெள்ளி, 16-ம் தேதி விலை குறைந்து, ஒரு கிராம் 211 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
17-ம் தேதி அதிரடியாக கிராமிற்கு 11 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 222 ரூபாய்க்கு எகிறியது. அதைத் தொடர்ந்து, 18-ம் தேதியும் விலை உயர்ந்து, ஒரு கிராம் 224 ரூபாயை எட்டியது.
இந்நிலையில், 19-ம் தேதி சற்று விலை குறைந்து, ஒரு கிராம் 221 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால், வார இறுதியில் மீண்டும் 5 ரூபாய் விலை உயர்ந்து, 20 மற்றும் 21-ம் தேதிகளில், ஒரு கிராம் 226 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது.
இந்த சூழலில், 22-ம் தேதியான நேற்று மீண்டும் கிராமிற்கு 5 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 231 ரூபாய் என்ற உச்ச விலையை வெள்ளி அடைந்தது. இந்த நிலையில், இன்று கிராமிற்கு மீண்டும் 3 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 234 ரூபாய் என்ற வரலாற்று உச்சத்தை அடைந்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.








