கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக கடந்த நான்கு ஆண்டுகாலமாக சிறப்பாக மக்கள் நலப் பணியாற்றி கட்சி பேதமின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையான உதவிகளை செய்து அனைவரின் மனதிலும் நீங்காத இடம் பிடித்து வந்தவருமான எம்.எல்.ஏ, டி.கே.அமுல் கந்தசாமி உடல் நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் காலமானார் இதனைத்தொடர்ந்து வால்பாறை சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து தரப்பு மக்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர் அதேபோல வால்பாறையில் உள்ள அண்ணா திடலில் வைக்கப்பட்டிருந்த மறைந்த வால்பாறை எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் திரு உருவப்படத்திற்கு அனைத்து கட்சியினர் சார்பாக மாலை அணிவித்து மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது இந்நிகழ்ச்சியில் அதிமுக, திமுக, காங்கிரஸ், நாம் தமிழர், வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் பிற அமைப்புகள் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் மற்றும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0