காதல் மனைவியை காரை ஏற்றிக் கொல்ல முயன்ற கணவர் கைது.

கோவை ஆகஸ்ட் 6 கோவை அருகே உள்ள கோவைப்புதூர் அறிவொளி நகரை சேர்ந்தவர் இளங்கோவன் ( வயது 45) இவரது மனைவி சுமதி ( வயது 35) கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான். இளங்கோவனின் முதல் மனைவி சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் தனது மகனுடன் வசித்து வருகிறார் .இரண்டாவது மனைவி சுமதி குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில்தூய்மை பணி சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார்.கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 நாட்களாக பிரிந்து வாழ்கின்றனர். இந்த நிலையில் இளங்கோவன்நேற்று சுமதியின் வீட்டுக்குகாரில் வந்தார்..அப்போது அங்கு நடந்து சென்ற சுமதியின் தாயார் முன் காரை திடீரென்று பிரேக் போட்டு நிறுத்தினார். பின்னர் அவரை மிரட்டினார். இதை யடுத்து அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த சுமதியின் மீது காரை ஏற்றினார்.இதில் சுமதி கீழே விழுந்தார். அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து சுமதி குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார்.இன்ஸ்பெக்டர் நெப்போலியன் வழக்கு பதிவு செய்து கணவர் இளங்கோவனை நேற்று கைது செய்தார். இவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ,கொலை மிரட்டல் உட்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.