மனைவிக்கு மெசேஜ் அனுப்பி விட்டு கணவர் தற்கொலை

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ,கோ -ஆப்ரேட்டிவ் காலனியை சேர்ந்தவர் நடராஜ் ( வயது45 ) குடிப்பழக்கம் உடையவர். இதனால் பலரிடம் கடன் வாங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று அவரது மனைவி மேட்டுப்பாளையத்தில் உறவினர் வீட்டு தூக்க நிகழ்ச்சிக்கு சென்று இருந்தார் .அப்போது நடராஜ் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.அப்போது தனது மனைவிக்கு வாட்ஸ் அப்பில் ” எனக்கு வாழ பிடிக்கவில்லை” என்று கூறி மெசேஜ் அனுப்பி இருந்தார். உடனே மனைவி மாலதி வீட்டுக்கு வந்தார். அப்போது படுக்கை அறையில் நடராஜ் மின்விசிறியில் வேட்டியை கட்டி தூக்கில் தொங்கியது தெரிய வந்தது. அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்தாக தெரிவித்தனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.