காதல் தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து .நண்பர் கைது

கோவை ஜூலை 25 கோவை மாவட்டம் காரமடையில் உள்ள கருப்பராயன் நகரை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் ரஞ்சித் குமார் (வயது 30. )அதே பகுதியில் வசிப்பவர் புவன் பிராங்க்ளின் ( வயது 23) இவரது சொந்த ஊர் திருச்சி மாவட்டம் புறத்தங்குடி. இருவரும் நண்பர்கள் . காதல் தகராறில் இவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த புவன் பிராங்கிளின், ரஞ்சித் குமாரைகத்தியால் குத்தினார்.இதில் இவருக்கு பலத்தகாயம் ஏற்பட்டது . சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் .இது குறித்து காரமடை போலீசில் புகார் செய்யப்பட்டது.சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் வழக்கு பதிவு செய்து புவன் பிராங்க்ளினை கைது செய்தார் இவர் நீதிமன்றத்தில்ஆஜர் படுத்தப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டார். .