கோவை மாநகரில் கடந்த 7 மாதத்தில் போதை பொருள் விற்பனை செய்த 320 பேர் கைது

போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் தகவல்.கோவை ஆகஸ்ட் 16கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-கோவை மாநகர பகுதியில் போதை பொருட்கள் கடத்துவதையும், அவற்றை விற்பனை செய்வதை தடுக்கவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது .இதற்காக போதை பொருட்கள் எந்த பகுதியில் இருந்துமாநகருக்குள் வருகிறது? அவற்றை கடத்தி வருபவர்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன? என்பதை கண்டறிந்து அந்த நபர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இதனால் போதை பொருட்கள் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை போதைப்பொருள் கடத்தியது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக மொத்தம் 175 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் மொத்தம் 320 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 207 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தவிர 11 ஆயிரம் போதை மாத்திரைகள், 92 கிராம் கொக்கைன், 607 கிராம் மெத்தே பெட்டாமைன், 48 கிராம் போதை ஸ்டாம்புகள், 35 கிராம் ஆசிஸ் என்ற போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 35க்கும் மேற்பட்டவர்கள் மீதுகுண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.படிக்கும் மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். நண்பர்கள் வற்புறுத்துகிறார்கள் என்று போதைப் பொருட்களுக்கு அடிமையாகி விடக்கூடாது. எனவே மாணவர்கள் இந்த விஷயத்தில் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். கல்லூரி படிப்பு தான் நமது வாழ்க்கையை தீர்மானிக்கும் .எனவேஒழுக்கத்தை கடைபிடித்து, நன்றாக படித்து வெற்றி பெறுவதை குறிக்கோளாக வைத்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.