கோவையில் ஒரே நாளில் பெண் உள்பட 3பேர்தற்கொலை

கோவைஜூலை10 கோவை சிங்காநல்லூர், உப்பிலிப்பாளையம், இந்திரா கார்டனை சேர்ந்தவர் சரண்ராஜ். இவரது மனைவி வினோதினி (வயது 33 )இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம். இதனால் மனமுடைந்து நேற்று அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதேபோல சிங்காநல்லூர், எஸ்.ஐ. எச். . காலனி, சாஸ்தா நகரை சேர்ந்தவர் சரவணன் ( வயது 47) குடிப்பழக்கம் உடையவர் .இவர் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்று விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இவரை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும்பலன் அளிக்காமல் இறந்தார் . இது குறித்து அவரது மனைவி கிருஷ்ணவேணி சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்துள்ளார்.இதே போல ஈரோடு மாவட்டத்தைசேர்ந்தவர் கணேசன் (வயது 54) சரவணம்பட்டி விளாங்குறிச்சி ரோட்டில் உள்ள சுந்தரம் வீதியில் வசித்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர் .இவர் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்வார் .இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்து நேற்றுஅவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் மின்விசிறியில் லுங்கியை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி சுஜாதா சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.