நீலகிரி மாவட்டம், கோத்தகிரி நகராட்சி மற்றும் கோத்தகிரி ஊராட்சி பகுதிகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இஆப., நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி நகராட்சிக்குட்பட்ட காந்தி மைதானம் மற்றும் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், ஜக்கனாரை ஊராட்சிக்குட்பட்ட மேல்கேரி மண்டபம் ஆகிய
பகுதிகளில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை, மாவட்ட
ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள்
(17.07.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்கள் எளிதாக
தெரிந்து கொள்ளும் வகையில், முகாமில் அரசு துறை அரங்குகள் அமைந்துள்ள இடம்
தொடர்பாக அறிவிப்பினை தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும் எனவும்,
பல்வேறு அரசு திட்டங்களின் சார்பாக வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு கையேடுகளை
பொதுமக்களுக்கு வழங்குமாறும், முகாமில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாம்
தொடர்பான அறிவிப்பினை தெரிவிக்க வேண்டும் எனவும், பொதுமக்கள் அளிக்கும்
மனுக்களை பெற்று அதனை பதிவு செய்ய வேண்டும் எனவும், இம்முகாமில் வழங்கப்படும்
மனுக்கள் மீது 45 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் எனவும் சம்மந்தப்பட்ட துறை
அலுவலர்கள் அவர்களிடையே தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
அதனைதொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், “உங்களுடன் ஸ்டாலின்”
திட்ட முகாமில், சுகாதாரத்துறையின் சார்பில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை
முறைகளை நேரில் பார்வையிட்டும், அங்கு MAY I HELP You,(காவல்துறையின் உதவி
மையம்), கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட (KMUT) அரங்கம் உள்ளிட்ட அரசுத்துறை
அரங்கங்களை பார்வையிட்டார்.
இந்நிகழ்வின்போது, குன்னூர் சார் ஆட்சியர் செல்வி சங்கீதா இ.ஆ.ப.,
கோத்தகிரி நகராட்சி ஆணையர் மோகன், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன்,
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) பழனிச்சாமி, கோத்தகிரி
வட்டாட்சியர்கள் திருமதி ராஜலட்சுமி,ராஜசேகரன் தனித்துணை ஆட்சியர்
(சமூக பாதுகாப்பு திட்டம்), கோத்தகிரி நகர்மன்ற தலைவர் திருமதி ஜெயகுமாரி, கோத்தகிரி
வட்டார வளர்ச்சி அலுவலர் அனிதா உட்பட பலர் உடனிருந்தனர்