16 வயது சிறுமி கூட்டு பலாத்கார வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை 3 பேரை சாகும் வரை சிறையில் அடைக்க உத்தரவு

கோவை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.கோவை ஜூலை 19கோவை சீரநாயக்கன்பாளையம்பகுதியைச்சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பிளஸ் 1 படித்து வந்தார் .அப்போது அவருக்கு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு அவர்கள் காதலித்து வந்தனர். கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் 26- ஆம் தேதி இரவு 8 மணி அளவில் ஐஸ்வர்யா நகர் பகுதியில் உள்ள பூங்காவுக்கு காதலுடன் சென்ற சிறுமி பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடினார். அவர்கள் இரவு 9 மணி அளவில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிள் வந்த 7 பேர் கொண்ட கும்பல் சிறுமி மற்றும் அவரது காதலனை வழிமறித்தனர். அவர்கள் சிறுமியின் காதலனை தாக்கினார். மேலும் பூங்கா அருகே உள்ள மாந்தோப்புக்கு அழைத்துச் சென்று சிறுமி மற்றும் காதலனின் ஆடைகளை கழற்றி வீடியோ எடுத்தனர்.இதன்பின் சிறுமியை மிரட்டி ஒவ்வொருவராக கூட்டு பலாத்காரம் செய்தனர். அதையும் வீடியோவாக எடுத்தனர். பின்னர் அவர்களை அங்கே விட்டுவிட்டு அந்த கும்பல் தப்பிச் சென்று விட்டது. சிறுமி மிகவும் சோர்வாக இருந்ததால் காதலனின் வீட்டிற்கு சென்று தங்கினார். மறுநாள் மாலை வீடு திரும்பிய அவர் தனது தாயிடம் நடந்த சம்பவத்தை கூறினார். இது குறித்து ஆர். எஸ். புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது .அதன் பேரில் போக் சோசட்டம் உள்ளிட்ட 15 சட்ட பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.. மேலும் தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 7 பேரையும் மடக்கி பிடித்தனர்.விசாரணையில்அவர்கள் கோவை சீரநாயக்கன்பாளையம் சேர்ந்த பெருமாள் மகன் மணிகண்டன் ( வயது 30 )வடவள்ளி சேர்ந்த ராஜேந்திரன் மகன் கார்த்திக் ( வயது 25) வடவள்ளி 4 -வது குறுக்கு தெருவை சேர்ந்த மணிகண்டன் என்ற ஆட்டோ மணிகண்டன் ( வயது 30) சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த தங்கராஜ் மகன் ராகுல் (வயது 21) ரவிக்குமாரின் மகன் பிரகாஷ் (வயது 22)வடவள்ளியைச் சேர்ந்த செல்வராஜ் மகன்நாராயணமூர்த்தி (வயது 30) சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் கார்த்திகேயன் என்பது தெரியவந்தது. அவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் போலீசார் சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வீடியோ மற்றும் மருத்துவ பரிசோதனை அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிந்த நிலையில் நேற்று நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பு கூறினார் அவர் தனது தீர்ப்பில் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டன், கார்த்திக், ஆட்டோ மணிகண்டன், ஆகியோருக்கு சாகும்வரை சிறைத் தண்டனையும், மற்ற 4 பேருக்கும் ஆயுள் தண்டனையும் விதித்தார் .மேலும் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இதை யடுத்து 7 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கோவையில் சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது,