.கோவை ஆகஸ்ட் 8 கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி, தேவி கோட்டத்தில் அருள்மிகு. வனபத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆடிக் குண்டம் திருவிழா கடந்த மாதம் 22-ஆம் தேதி தொடங்கி கடந்த 5-ம் தேதி வரை நடைபெற்றது. கடந்த ஜூன் 30-ம் தேதி முதல் நேற்று வரை பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. காலை 10 மணிக்கு சிறப்பு பூஜைக்கு பின்னர் ஆனைமலை மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையர் முத்துராமலிங்கம் மேற்பார்வையில் கோவில் உதவி ஆணையர் கைலாசமூர்த்தி தக்கார் பிரதிநிதி சரவணன் ,கோவில் ஆய்வாளர் ஹேமலதா ஆகியோர் முன்னிலையில் மொத்தம் 27 உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் நிரந்தர உண்டியல்களில் ரூ.22 லட்சத்து 16 ஆயிரத்து 60, தட்டு காணிக்கை உண்டியலில் ரூ14,லட்சத்து16 ஆயிரத்து934, திருவிழாக் கால உண்டியலில் ரூ.6 லட்சத்து 13 ஆயிரத்து 626 என மொத்தம் ரூ.43 லட்சத்து 6 ஆயிரத்து 620 உண்டியல் வருவாயாக கிடைத்துள்ளது. மேலும் தங்கம் 58 கிராம் வெள்ளி 90 கிராம் ஆகியவற்றையும் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியிருந்தனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0