மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ரூ 65.50 லட்சம் உண்டியல் காணிக்கை வருவாய்

கோவை ஆகஸ்ட் 9 கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை எண்ணப்படுகிறது. அதன்படி நேற்று கோவில் தக்கார் ஜெயக்குமார், துணை ஆணையர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் காணிக்கைகள் எண்ணும் பணியில் ஈடுபட்டனர் .இதில் நிரந்தர உண்டியல் மூலம் ரூ 65 லட்சத்து 54 ஆயிரத்து 589 வருமானமாக கிடைத்தது. மேலும் 108 கிராம் தங்கம், 4 கிலோ 98 கிராம் வெள்ளி, 13 கிலோ 950 கிராம் பித்தளை இருந்தது.