நீலகிரி மாவட்டம், உதகை வட்டம் தொட்டபெட்டா ஊராட்சி முத்தோரை
சமுதாய கூடத்தில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை
அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார், உதகை
நகாராட்சிக்குட்பட்ட ஒக்கலிகர் மண்டபத்தில் நடைபெற்ற “உங்களுடன்
ஸ்டாலின்” திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா
தண்ணீரு இ.ஆ.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு
மேற்கொண்டனர்,உதகை வட்டம் தொட்டபெட்டா ஊராட்சி முத்தோரை சமுதாய கூடத்தில்
நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமில், அரசு தலைமை கொறடா
அவர்கள், பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை சம்மந்தப்பட்ட துறை
அலுவலர்கள் முறையாக பெற்றுக்கொள்கிறார்களா எனவும், அடிப்படை வசதிகள்
சரியான முறையில் செய்து தரப்பட்டுள்ளதா எனவும், மருத்துவ முகாமில்
பொதுமக்களுக்கு தேவையான பரிசோதனைகளை செய்யப்படுகிறதா எனவும்,
நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது
45 நாட்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என சம்மந்தப்பட்ட துறை
அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
முன்னதாக, அரசு தலைமை கொறடா அவர்கள், கலைஞர் கனவு இல்லம்
திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளுக்கு மின்வசதி வேண்டி விண்ணப்பித்த
3 நபர்களுக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில் அதற்கான தடையில்லா
சான்றிதழ்களை வழங்கினார்,அதேபோல், மாவட்ட ஆட்சித்தலைவர் உதகை
நகாராட்சிக்குட்பட்ட ஒக்கலிகர் மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின்”
திட்ட முகாமினை நேரில் பார்வையிட்டு, முகாமில் அமைக்கப்பட்டுள்ள
மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும்
பரிசோதனைகளையும், இம்முகாமில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
விண்ணப்பம் பெற அமைக்கப்பட்டுள்ள இடங்களில் நடைபெற்று வரும் விண்ணப்ப
படிவங்கள் பதிவு செய்யும் பணிகளையும், இசேவை மூலம் நடைபெற்று வரும்
ஆதாாரில் பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகள் நடைபெறுவதை பார்வையிட்டார்
இந்நிகழ்வுகளில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி அபிலாஷா
கௌர் இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், உதகை வருவாய்
கோட்டாட்சியர் சதீஷ், உதகை நகராட்சி ஆணையாளர் வினோத்
(பொறுப்பு), உதகை நகர்மன்ற தலைவர் வாணீஸ்வரி, உதகை
வட்டாட்சியர் சங்கர்கணேஷ், உதகை வட்டார வளர்ச்சி அலுவலர்
ஸ்ரீதரன், மற்றும் தங்கள் வார்டு பகுதிகளிலிருந்து திரளான மக்கள் தங்களின் பல்வேறு கோரிக்கை மனுக்களை உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கலந்துகொண்டு மனுக்களை அதிகாரிகளிடம் வழங்கி சென்றனர்,

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0