வால்பாறையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் பல்வேறு பணிகளின் மூலம் 80 கோடி ரூபாய் முறைகேடு செய்துள்ளதாக அதை கண்டித்தும், 24 மணிநேரமும் விற்பனை செய்யப்படும் மது மற்றும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் தடை செய்யவும், நகராட்சி வளர்ச்சி பணிகளை முறையாக செய்திடவும், பொது நிதியை அரசு அதிகாரம் கொண்டு திருடுவதை தடுக்கவும் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி அதை கண்டித்தும், இதனால் வால்பாறை நகராட்சியில் வளர்ச்சி பணிகள் எதுவும் முறையாக நடைபெறாமல் முடங்கி கிடைப்பதாகவும் நாம் தமிழர் கட்சியினர் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் மேத்யூ தலைமையில் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் வெள்ளிங்கிரி முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு பேச்சாளராக அக்கட்சியின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை சரவணன், சல்மான் மற்றும் புதுகை ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர் வால்பாறையில் உள்ள பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட, நகர நிர்வாகிகளும் உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டனர்