ஐ.டி. ஊழியர் தற்கொலை..

கோவை செல்வபுரம், தில்லைநகர், ராஜ்நகரை சேர்ந்தவர் முத்து நாராயணன். இவரது மகன் சத்ய சூரஜ் (வயது 27) சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். உடல் நலக் குறைவால் கடந்த 2 மாதங்களாக வீட்டில் இருந்து வேலை செய்து வருகிறார். மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை முத்து நாராயணன் செல்வபுரம் போலீசில் புகார் செய்தார் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.