ஐ.டி .இன்ஜினியர் தூக்கு போட்டு தற்கொலை

கோவை ஜூலை 7 ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரியேஷ் குப்தா (வயது 26) இவர் கோவையில் உள்ள ஐ.டி .நிறுவனத்தில்கடந்த 3 மாதமாக சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வந்தார்.பீளமேடு அண்ணா நகரில் உள்ளஒரு விடுதியில் தங்கியிருந்தார்.பெற்றோர்களை விட்டு பிரிந்து இருந்ததால் மன அழுத்தத்துடன் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று அவர் தங்கியிருந்த அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பீளமேடுபோலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.