ஐ.டி. பெண் ஊழியர் தற்கொலை..?

திருப்பூர் மாவட்டம், முரியாண்டம் பாளையம் பக்கம் உள்ள சூரிபாளையத்தைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகள் சந்தியா ( வயது 25) தற்போது கோவை இடையர்பாளையம் ஆட்டோ நகரில் வசித்து வந்தார்.இவர் கோவை காந்திபுரத்தில் உள்ள ஐ.டி .நிறுவனத்தில் கடந்த 6மாதமாக ஊழியராக வேலை பார்த்து வந்தார்..இவர் தன்னுடன் கல்லூரியில் படித்த ஒருவரை காதலித்து வந்தாராம் .இந்த நிலையில் அவரது காதலன் சந்தியாவின் தாயார் ருக்மணிக்கு செல்போனில் பேசி சந்தியா விஷம் குடித்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக கூறினாராம். ருக்மணி வந்து பார்த்தபோது சந்தியா மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் இறந்தது தெரிய வந்தது.தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.இதுகுறித்து அவரது தாயார் ருக்மணி கவுண்டம்பாளையம் போலீசில்புகார் செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் வெற்றி செல்வி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.