ஜனவரி 9ம் தேதி காலை தீர்ப்பு..!!

விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் கோரிய வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் நாளை மறுநாள் (ஜனவரி 9) தனது இறுதித் தீர்ப்பை வழங்க உள்ளது.
இன்றைய விசாரணையின் போது தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “நாங்கள் எங்கள் முடிவை ஏற்கனவே ஜனவரி 6-ஆம் தேதியே இணையதளத்தில் (Portal) பதிவேற்றம் செய்துவிட்டோம்; எனவே நாங்கள் பதில் அளிக்கவில்லை என்று கூறுவது தவறு” எனத் தனது தரப்பு வாதத்தை முன்வைத்தார்.

​இந்தத் திரைப்படம் வரும் ஜனவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை நீதிமன்றம் வழங்கப்போகும் தீர்ப்பைப் பொறுத்தே திட்டமிட்டபடி படம் வெளியாகுமா அல்லது ரிலீஸ் தேதி தள்ளிப்போகுமா என்பது உறுதியாகும். இதனால் ஒட்டுமொத்தத் திரையுலகமும், விஜய் ரசிகர்களும் நாளை வரப்போகும் அந்த முக்கியத் தீர்ப்புக்காக ஆவலோடு காத்திருக்கின்றனர்.