கோவைக்கு சுற்றுலா வந்த வட மாநில பெண்ணிடம் நகை – பணம் பறிப்பு

கோவை மே 7 ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்தவர் தேவேந்திர சிங் ( வயது 29)இவர் குடும்பத்துடன் நேற்று கோவைக்கு சுற்றுலா வந்திருந்தார்,ஆர். எஸ்.புரம், லாலி ரோடு -மேட்டுப்பாளையம் ரோடு சந்திப்பில் குடும்பத்துடன் நடந்து சென்றார் .அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர் தீபேந்திர சிங்கின்தாயார் கையில் இருந்த பையை கொள்ளையடித்து கொண்டு தப்பி ஓடி விட்டார் .அதில் 20 கிராம் எடைகொண்ட 2 தங்கச் செயின், ஒரு செல்போன், ஸ்மார்ட் வாட்ச், ரூ 9,500 பணம் இருந்தது. இது குறித்து திபேந்திர சிங் . ஆர் .எஸ் . புரம். போலீசில் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் செல்லதுரை வழக்கு பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகிறார்.பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.