ஐ.டி.ஊழியர் வீட்டில் நகை திருட்டு.

கோவை மே 15 கோவை துடியலூர் சாய் நகரை சேர்ந்தவர் சாய்வசந்த் ( வயது 34) இவர் கீரணத்தம் பகுதியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர் .இந்த நிலையில் சாய்வசந்த் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தன் மாமியார் வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று காலையில் வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டில் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 34 பவுன் தங்க நகைகளை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து துடியலூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..