கோவை புதிய போலீஸ் கமிஷனராக கண்ணன் பதவி ஏற்பு..!

கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பணி புரிந்து வந்தவர் சரவணசுந்தர்.இவர் கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.யாக இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சென்னையில்ஐ.ஜியாக பணியாற்றி வந்த கண்ணன் நியமிக்கப்பட்டார். அவர் கோவை மாநகர போலீஸ் கமிஷனராகபதவி ஏற்றுக்கொண்டார்.முன்னதாக மாநகர கமிஷனர் பொறுப்பை கவனித்து வந்த மேற்கு மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சரவணன் சுந்தர் புதிய கமிஷனர் கண்ணனிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.அவருக்கு துணை கமிஷனர்கள் தேவநாதன், கார்த்திகேயன், திவ்யா மற்றும் உயர்போலீஸ் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.