கேரள லாட்டரி டிக்கெட் விற்பனை..!

கோவை மாவட்டம் ஆனைமலை பக்கம் உள்ள அம்பராம்பாளையம் பகுதியில் தடை செய்யப்பட்ட கேரள மாநிலலாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக போலீசுக்கு தகவல் வந்தது ஆனைமலை காவல் நிலைய சப்- இன்ஸ்பெக்டர் சக்திவேல் நேற்று மாலை அங்கு ரோந்து சுற்றி வந்தார். அப்போது கேரள மாநில லாட்டரி டிக்கெட் விற்பனை செய்ததாக ஆனைமலை கணபதிபாளையம், பெரியார் நகரை சேர்ந்த செல்வராஜ் ( வயது 45) கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து 625 கேரள மாநில லாட்டரி டிக்கெட் பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல பொள்ளாச்சி தாலுகா போலீசார் அய்யம்பாளையம் பஸ் ஸ்டாப் பகுதியில் நடத்திய சோதனையில் கேரள மாநில லாட்டரி டிக்கெட் விற்பனை செய்ததாக திருப்பூர் மாவட்டம் ,உடுமலையை சேர்ந்த கண்ணன் ( வயது 54) கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து 24 லாட்டரி டிக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டது. இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.