கோவை, கவுண்டம்பாளையத்தில் அரசு அலுவலர்கள் வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் 13 வீடுகளில் 56 பவுன் நகை மற்றும் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆசிப் (48), கல்லு ஆரிப் ( 45) மற்றும் இர்பான் (42) ஆகிய மூன்று பேரை போலீசாரால் சுட்டு பிடிக்கப்பட்டனர்.இதில் ஆசிப் (48) இறந்தார். இந்த கொள்ளை கும்பலுக்கு சவாரி சென்று உதவியதாக மைல்கல் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆயுப்கான் (35) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த கொள்ளை கும்பலுக்கு கோவையில் திட்டம் தீட்டி கொடுத்த உத்திரபிரதேசம் மாநிலம் காசியாபாத்தை சேர்ந்த தாவூத் (18) , பர்மான் (23) ஆகிய இருவரை கைது செய்தனர்.இவர்கள் சொன்ன ஆலோசனையின் பேரிலே, கொள்ளையர்கள் வந்து கொள்ளை திட்டத்தை செயல்படுத்தி உள்ளனர். இந்த வழக்கில் மொத்தம் 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.பர்மான் நேற்று இறந்த ஆசிபின் தம்பி என்று கூறப்படுகிறது.









