சபாஷ் போடலாமே!! முகமூடி கொள்ளையனை துணிச்சலுடன் அடித்து விரட்டிய பெண்.!!

ஞ்சாப் மாநிலத்தில், பணப்பரிமாற்ற கடை ஒன்றிற்குள் முகமூடி அணிந்து புகுந்த மர்ம நபர், கத்தியைக் காட்டி இளம்பெண் ஊழியரை மிரட்டி கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடையில் இருந்த சோனி வர்மா என்ற இளம்பெண்ணிடம் கறுப்பு நிற கவரைக் கொடுத்து பணத்தை நிரப்புமாறு அந்த நபர் மிரட்டியுள்ளார். ஆனால், சற்றும் பதற்றமடையாத சோனி வர்மா, தனது உயிரையும் பொருட்படுத்தாமல் கொள்ளையனுடன் நேருக்கு நேர் மோதினார்.

கொள்ளையனின் தலையைப் பிடித்து அவர் கடுமையாகப் போராடியதைக் கண்டு மிரண்டு போன அந்த நபர், தனது கத்தியைக் கீழே போட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். கொள்ளையனைத் துரத்திச் சென்ற அந்தப் பெண்ணின் வீரதீரச் செயல்கள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவை பார்த்து பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் சோனி வர்மாவிற்கு தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தலைமறைவான கொள்ளையனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.