கோவை ,தொண்டாமுத்தூர் சந்தைப்பேட்டை பகுதியில் அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோவில் திருநெறிய தெய்வத்தமிழ் திருக்குட நன்னீராட்டு பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலில், சிவாலய தீர்த்தங்கள் எடுத்துவரப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையில், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் பவானி, கோவில் அறங்காவலர் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் பி வேலுமணி, கோவை வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து குளத்துப்பாளையம் வேலும் மயிலும் கிராமிய கலை குழுவின் வள்ளி கும்மி ஆட்டம் நடைபெற்றது. தொண்டாமுத்தூர், நாளைய தலைமுறையின் ஜமாப் கலைக்குழுவின் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் 5000க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.







