கோவை; சென்னையில் வக்கீல்கள் கடந்த 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19- ஆம் தேதி போலீசாரால் தாக்கப்பட்டனர். அந்த சம்பவத்தை ஆண்டுதோறும் கறுப்பு தினமாக வக்கீல்கள் கடைபிடித்து வருகிறார்கள். தமிழ்நாடு – புதுச்சேரி வக்கீல்கள் கூட்டுக்குழு முடிவின்படி இன்று ( புதன்கிழமை) கோவையில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடத்தினார்கள். வக்கீல்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். வக்கீல்கள் சேமநல நிதியே ரூ 10 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். மத்திய அரசின் புதிய சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர்.
