கோவை ஆகஸ்ட் 1 கோவை அருகே உள்ள கோவில் மேட்டை சேர்ந்தவர் ருக்சானா (வயது 21) இவர் கடந்த 22 .10 – 20 17 அன்று தனது நண்பரின் வீட்டுக்கு சென்று புத்தகம் வாங்கி விட்டு வருவதாக கூறிவிட்டு வெளியே சென்றார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் அந்த பெண் கிடைக்கவில்லை. இது குறித்து சரவணம் பட்டி போலீசார் விசாரணை நடத்தினர் .இதில் ருக்சானாவின் செல்போனுக்கு கடைசியாக பேசியது சரவணம்பட்டியை சேர்ந்த பிரசாந்த் (வயது 30) என்பது தெரிய வந்தது. இதற்கிடையே அவர் போலீசில் சரண் அடைந்தார். அவரிடம் விசாரணை நடத்திய போது திடுக்கிடும் தகவல் வெளியானது. ருக்சா னாவை பிரசாந்த் காதலித்துள்ளார். இதை அறிந்த இளம் பெண்ணின் பெற்றோர் அவரை வேறொருவருக்கு திருமணம் செய்து கொடுக்க ஏற்பாடு செய்து வந்தனர். இதை அறிந்த பிரசாந்த் தனக்கு கிடைக்காத ருக்சா னா வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று எண்ணி கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி ருக் சானாவுக்கு ஆசை வார்த்தை கூறி மேட்டுப்பாளையம் கல்லார் பழப்பண்னைக்கு கடத்திச் சென்றார். அங்கு இளம் பெண்ணின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தார் .பின்னர் உடலை புதர் மறைவில் உலர்ந்த இலைகளால் மூடி வைத்துவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் பிரசாந்த்தை அந்த பகுதிக்கு அழைத்துச் சென்று இளம் பெண்ணின் உடலை மீட்டனர். இந்த வழக்கு கோவை 5-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சிவக்குமார் குற்றம் சாட்டப்பட்ட பிரசாந்துக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0