கோவையில் ரயில்வே பாலத்தின் அடியில் சிக்கிய லாரி,போக்குவரத்து பாதிப்பு.

கோவை அரசு மருத்துவமனை ரோட்டில் இருந்து டவுன் ஹால் மணிக்கூண்டு பகுதியை நோக்கி நேற்று நள்ளிரவு லாரி வந்து கொண்டிருந்தது. அந்த லாரி “லங்கா கார்னர் ” பாலத்தில் வந்த போது பாலத்தின் அடியில் மாட்டிக் கொண்டது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த டிரைவர், லாரியின் சக்கரத்தில் இருந்த காற்றை இறக்கி விட்டு, லாரியை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் முடியாமல் போனது. இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். பின்னர் ஜெசிபி வாகனத்தை வரவழைத்து வெகு நேரம் போராடி லாரியை மீட்டனர்.