கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வேவர்லி எஸ்டேட்டில் தோட்டத்தொழிலாளியாக பணிபுரிந்து வரும் சொர்பத் அலி என்பவரின் 7 வயது மகன் நேற்று முன்தினம் கரடி தாக்கி உயிரிழந்தார் சம்பவம் அறிந்து நேற்று விரைந்து சென்ற பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார் அதைத்தொடர்ந்து தமிழக அரசு வனத்துறை சார்பாக வழங்கும் இழப்பீட்டு தொகை ரூபாய் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை சார் ஆட்சியர் ராமகிருஷ்ண சாமி, மாவட்ட வன அலுவலர் தேவேந்திர குமார மீனா, வால்பாறை நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர், வட்டாட்சியர் மோகன் பாபு ஆகியோர் முன்னிலையில் வழங்கினார் மேலும் வேவர்லி எஸ்டேட் நிர்வாகத்தின் சார்பாக ரூபாய் 50 ஆயிரத்தை நிறுவனத்தின் பொறுப்பாளர் ஷெரீப் வழங்கினார் இந்நிகழ்வின் போது நகர் மன்ற தலைவர் அழகு சுந்தர வள்ளி செல்வம்,நகர் மன்ற துணைத்தலைவர் த.ம.ச.செந்தில் குமார், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளரும் 4 வது வார்டு நகர் மன்ற உறுப்பினருமான ஜே.பி.ஆர்.என்ற ஜே.பாஸ்கர், வால்பாறை வனச்சரக அலுவலர் சுரேஷ் கிருஷ்ணன் மற்றும் பலர் உடனிருந்தனர் மேலும் சிறுவனை தாக்கிய கரடியை தொடர்ந்து கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0