மகேந்திரா வீரோ மைலேஜ் தராததால் வாக்குவாதம்!

பழனியில் மகேந்திரா நிறுவனத்தில் வாங்கிய சரக்கு வாகனத்தில் போதிய மைலேஜ் தராததால் வாகனத்தின் உரிமையாளர் ஷோருமை முற்றுகையிட்டு வாக்குவாத்ததில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே புளியம்பட்டி சின்னாரகவுண்டன் வலசு பகுதியில், எண்ணெய் விநியோக நிறுவனத்தை நடத்தி வருபவர் பிரசாந்த்.  இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பழனி மகேந்திரா நிறுவனத்தில் சரக்கு வாகனமான மகேந்திரா வீரோ ,9 லட்சம் மதிப்பில் வாங்கி , 2 லட்சம் கண்டெய்னர் பொருத்தபட்டு மாத தவனை 17,600 ருபாய் கட்டி வருகிறார். இந்நிலையில் சரக்கு வாகனம் வாங்கியதில் இருந்தே டேஸ் போர்டு ,பிரச்சனை ,ஸ்டேரிங் பிரச்சனை,ஜி.பிஎஸ், ஏசியில் தண்ணீர் கசிவு பிரச்சனை என தொடர் புகாரை ஷோருமில் தெரிவித்து அவ்வபோது சரி செய்து கொடுத்து வந்தனர்.

இந்நிலையில் மேலும் கடந்த ஒரு மாதமாக வாகனத்தின் மைலேஜ் பிரச்சனை வந்துள்ளது. மகேந்திரா நிறுவனம் சார்பில் ஒரு லிட்டருக்கு 18.4 கிலோமீட்டர் மைலேஜ் கிடைக்கும் என விளம்பரத்தை நம்பி வாகனத்தை வாங்கியுள்ளார். ஆனால் ஒரு லிட்டர் டீசலுக்கு 9 கிலோமீட்டர் மட்டுமே மைலேஜ் தருவதால் தொடர்ந்து மாதம் 25 ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு வருவதாக கூறி வாகன உரிமையாளர் பிரசாந்த் ,ஷோருமில் சரக்கு வாகனத்தை சரிசெய்து கொடுக்காததை கண்டித்து நிறுவன அதிகாரிகளிடம் வாக்குவாத்ததில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.