சிங்காரம் என்ன தொட்டிருக்கக்கூடாது உலக கோமாளியாகும் டொனால்ட் டிரம்ப்

வாஷிங்டன் : ஆகஸ்ட் : 08
ஒரு நாடு என்பது வெறும் நிலப்பரப்போ, மக்கள் தொகையோ மட்டுமல்ல; அது அரசியல், சமூக, பொருளாதாரம், பாதுகாப்பு போன்ற துறைகளில் ஒருங்கிணைந்து இயங்கும் ஒரு பெரிய அமைப்பு. ஒவ்வொரு நாடும், தன்னுடைய குடிமக்கள் மற்றும் உலக சமுதாயம் ஆகியவற்றின் முன்னேற்றத்திற்காக சில முக்கியமான கடமைகளை மேற்கொள்ள வேண்டும்.நாடு தனது எல்லைகளையும், குடிமக்களின் உயிரையும், சொத்துக்களையும் பாதுகாக்க வேண்டும்.போலீஸ், இராணுவம், உளவுத்துறை போன்ற அமைப்புகள் மூலம் உள் மற்றும் வெளி அச்சுறுத்தல்களை தடுக்க வேண்டும்.இயற்கை பேரிடர்களில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் செய்ய வேண்டும்.குடிமக்களுக்கு சமத்துவமான நீதிமுறை கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.குற்றங்களை தடுக்க வலுவான சட்டங்களை அமல்படுத்த வேண்டும்.மனித உரிமைகளை காக்கும் விதமாக சட்ட நடைமுறைகள் இருக்க வேண்டும்.வேளாண்மை, தொழில், வாணிகம், சேவை துறைகள் ஆகியவற்றை மேம்படுத்தல்.வரிகள், வணிக கொள்கைகள் மற்றும் முதலீட்டு ஊக்கங்கள் மூலம் பொருளாதாரத்தை வலுப்படுத்தல்.ஆகிய முக்கியமான கடமைகளை செய்யவேண்டும்.இந்த நிலையில்
டொனால்ட் ஜான் டிரம்ப் – தொழிலதிபராக, உண்மையான கொடூர பிசினஸ் போட்டியில் வென்று வந்தவர். தி அப்ரெண்டிஸ் என்ற டிவி நிகழ்ச்சியில், யூ ஆர் பிரண்ட் என்ற வார்த்தையால் புகழ் பெற்றவர். ஆனால் அந்த வார்த்தை சில ஆண்டுகளுக்குப் பிறகு அவருக்கே திரும்பப்போனது யாருக்கும் மறக்க முடியாது.
2016ம் ஆண்டு, அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், டிரம்ப் போட்டியிடும் செய்தி முதலில் அனைவருக்கும் ஒரு ஜோக் போலதான் இருந்தது. ஆனால், சீரிய அரசியல் வாசிப்புகள் இல்லாதவராக இருந்தாலும், சில பொதுப் பொருளாதார கோணங்களில் மக்கள் ஆதரவு கிடைத்தது. அதனால், அவர் 45வது அமெரிக்க அதிபராக பதவியேற்றார்.
அரசியலைக் காமெடியாக மாற்றிய தலைவர்: டிரம்ப், அரசியல் சூழலை முற்றிலும் வித்தியாசமாகக் கையாளத் தொடங்கினார். உலகநாயகமான அமெரிக்காவின் பிரதிநிதி என்ற அந்த உயர்ந்த பதவிக்கு அவர் கொடுத்த மரியாதை மிகவும் சர்ச்சைக்குரியதாக இருந்தது.
வாயைத் திறந்தாலே சர்ச்சை: பெண்களை இழிவாக பேசுதல்,குறைந்தபட்ச மதிப்பும் இல்லாத பத்திரிகையாளர் சந்திப்பு,
முஸ்லிம்கள், மெக்ஸிகோ இனப்பெருக்கம், மெடிக்கேர் திட்டங்கள் மீது இழிவான கருத்துகள்.இவை அனைத்தும் அதிபர் பதவிக்கு மோசமான முன்னுதாரணங்களாக அமைந்தன.
2020ம் ஆண்டு உலகம் கொரோனாவால் சினுங்கியது. உலக நாடுகள் மருத்துவ அறிவை நம்பி செயல்பட முயன்றன. ஆனால் டிரம்ப் “சோப்புக் கருவிகளை உடலில் செலுத்தலாம்” என்றார்.முகமூடி போட மறுத்தார்.”இது சீனாவின் சூழ்ச்சி” என்று உலகத்தையே ஒதுக்கினார்.
அவர் கொடுத்த தவறான மருத்துவ அறிவுரைகள் பல உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தியன. அதிலும், டிரம்ப் சொன்னதாலே நம்பினோம் என்று சில அமெரிக்கர்கள் உண்மையாகவே கிருமிநாசினிகளை குடித்த சம்பவங்கள் செய்தியாயின.
ட்விட்டரின் அதிபர் – அமெரிக்க அதிபரைவிட!டிரம்ப் தனது ஆட்சியில் மிக அதிகம் பயன்படுத்திய ஒன்று – ட்விட்டர். அரசியல் அறிவிப்புகள்,பிறநாடுகளுடன் தொடர்புகள்,முக்கிய சட்ட திட்டங்கள் – இவை அனைத்தையும் அவர் ஒரு ட்வீட்டில் முடித்துவிடுவார்.ஆனால் அந்த ட்வீட்கள் பலமுறை தவறான தகவல்கள், பாகுபாடு தூண்டுவன என்றும் விமர்சிக்கப்பட்டன.
அந்த அளவுக்கு போனது, ட்விட்டர் நிறுவனமே அவரை நிரந்தரமாக பிளாக் செய்தது – இது ஒரு அதிபருக்கு உலகத்தில் முதன்முறையாக நடந்த நிகழ்வு.
ஜனவரி 6 கலவரம் – ஜனநாயகத்துக்கு கருப்புப் பக்கம்: 2020 தேர்தலில் தோல்வியை ஏற்க மறுத்த டிரம்ப், “மாபெரும் தேர்தல் மோசடி” என மக்களை தூண்டினார்.
அதனால், 2021 ஜனவரி 6ம் தேதி, அமெரிக்கக் காங்கிரஸுக்குள் மக்கள் நுழைந்து கலவரம் செய்தனர்.
இது அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஜனநாயகம் மீது நேரடியான தாக்கம் நிகழ்ந்த அந்த தருணத்தில், டிரம்ப் இதைத் தூண்டியவர் என்ற விமர்சனங்கள், விசாரணைகள் நடைபெற்றன.
மக்கள் பார்வையில்
அவர் ஒரு கோமாளி
அரசியல் அனுபவம் இல்லாமலும், சர்ச்சையை நாடி பேசுவதும், தவறான தகவல்களை பரப்புவதும் காரணமாக, உலக நாடுகளில் பலரும் ட்ரம்பை கடுமையாக கேலி செய்தனர்.இவர்களில் முதன்மையானவர்கள் ஜெர்மனியின் அரசுத்தலைவி ஆங்கிலா மெர்கல்,கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், “அமெரிக்க உற்பத்தியை பாதுகாக்க” என்ற பெயரில் இந்தியாவில் இருந்து வரும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்ததால், அதன் தாக்கம் எதிர்பார்த்ததை விட அவர்மீதே அதிகமாக விழும். குறுகிய காலத்தில் இது ஒரு வலுவான அரசியல் செய்தி போல தோன்றினாலும், நீண்டகாலத்தில் டிரம்ப் பொருளாதாரம், தூதரகம், அரசியல் ஆகிய மூன்றிலும் கடுமையான பின்னடைவைச் சந்திக்க நேரிடும்.
இந்தியாவில் இருந்து வரும் மலிவான மருந்துகள், துணிகள், உதிரி பாகங்கள், மென்பொருள் சேவைகள் போன்றவை அமெரிக்க நுகர்வோருக்கு அவசியமானவை. வரி காரணமாக அவற்றின் விலை உயர்ந்தால், நேரடி சுமையைச் சந்திப்பது அமெரிக்க மக்களே. மேலும், இந்தியா பதிலடி வரி விதித்து பாதாம், ஆப்பிள், விமானப் பாகங்கள், இயந்திரங்கள் போன்ற அமெரிக்க ஏற்றுமதி பொருட்களைத் தாக்கும். இதனால் அமெரிக்க நிறுவனங்கள் வருவாய் இழப்பைச் சந்திக்க, இந்திய சந்தையை போட்டியாளர்களிடம் இழக்கும் அபாயமும் உண்டு.
அமெரிக்காவுடன் உறவு தளர்ந்தால், இந்தியா ரஷ்யா, சீனா, மத்திய கிழக்கு நாடுகள் போன்றவற்றுடன் கூட்டணியை வலுப்படுத்தும். இது ஆசியாவில் அமெரிக்காவின் தாக்கத்தை குறைக்கும். குறிப்பாக, சீனாவுக்கு இந்தியா-அமெரிக்க இடைவெளியைப் பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். இது அமெரிக்காவின் ஆசியத் தந்திரத்திற்கு பெரிய பின்னடைவாகும்.
அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளி வாக்காளர்கள், இந்நடவடிக்கைக்கு எதிராகச் செல்லலாம். மேலும், வணிக உடன்படிக்கைகளில் டிரம்ப் “நம்பமுடியாத கூட்டாளி” என்ற பெயரைப் பெறுவதால், பிற நாடுகள் அமெரிக்காவுடன் நீண்டகால ஒப்பந்தங்களில் ஈடுபட தயங்கும்.டிரம்ப், இந்தியாவுக்கு வரி விதிப்பதன் மூலம் குறுகிய காலத்தில் அரசியல் ஆதரவைப் பெற்றாலும், நீண்டகாலத்தில் பொருளாதார இழப்பு, தூதரக தனிமை, வாக்காளர் ஆதரவு குறைவு ஆகிய காரணங்களால் கேவலமான நிலைக்கு தள்ளப்படுவார்.
உலகத்தில் என்ன நடந்தாலும், இந்தியாவின் வளர்ச்சி பாதையில் எந்தவிதமான தடையும் இருக்காது. இந்தியாவை பொறுத்தவரை, பொருளாதாரம் மற்றும் அரசியல் என பல விதங்களில் இணைக்கப்பட்ட ஒரு பிரதேசம்.
இந்தியாவை பொறுத்தவரை, ஒரு பொருளாதார தன்னிறைவு உள்ள நாடு. இங்கே மழை நன்றாக பெய்கிறது. நிறைய உழைக்கும் மக்கள் இருக்கிறார்கள். தொழிற்சாலைகள் அதிகம் உள்ள நாடுகளில் இதுவும் ஒன்று. சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி வளர்ந்து வரும் நாடுகளில் இதுவும் ஒன்று. உள்நாட்டு கட்டமைப்பும் மிகவும் வலுவாக உள்ளது. இப்போதைக்கு, பணவீக்கம் குறைவாக உள்ளது. கடனுக்கான வட்டி விகிதமும் குறைக்கப்பட்டு வருகிறது.
எல்லாமே இந்தியாவுக்கு சாதகமான சூழ்நிலைதான் உள்ளது. இந்தியாவின் வளர்ச்சியை பொறுக்காமல் தான், அமெரிக்கா இந்தியா மீது வன்மம் கொண்டு, இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கலாம் என நினைக்கிறது. ஆனால், இந்தியாவின் வளர்ச்சியை அமெரிக்கா உட்பட எந்த நாடும் தடுக்க முடியாது. இந்தியா முழுமையான பொருளாதாரத் தன்னிறைவு பெற்ற நாடு.
இந்தியாவுக்கு ஏற்றுமதியால் கிடைக்கும் வருமானம் என்பது மிகவும் குறைவு. முழுவதுமாக ஏற்றுமதி நிறுத்தப்பட்டால் கூட, இந்தியாவின் பொருளாதாரம் எந்த வகையிலும் பாதிப்பு அடையாது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது 330 லட்சம் கோடி ஆகும். அதில் ஏற்றுமதி என்பது மிகவும் குறைவானது. அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மொத்த மதிப்பு 70 முதல் 80 பில்லியன் டாலர் மட்டுமே. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில், ஏற்றுமதியின் பங்கு வெறும் இரண்டு சதவீதம் தான். அந்த இரண்டு சதவீதத்தில் கூட, அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வது வெறும் 20% தான். எனவே, அந்த இரண்டு சதவீத ஏற்றுமதியும் முழுமையாக நின்றால் கூட, 98% வரை இந்தியாவுக்கு வலுவான ஒரு அம்சமாகத்தான் இருக்கும்.
அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் மரபணு மாற்றப்பட்ட விவசாய பொருட்கள் உட்பட பல பொருட்கள் பயிரிடப்படுகின்றன. அந்த பொருட்களை எல்லாம், அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவிடம் விற்க வேண்டும் என்றுதான் விவசாய முதலாளிகள் டிரம்ப்புக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். அதனால் தான் டிரம்ப், இந்தியாவிடம் இந்த பொருட்களை எல்லாம் வாங்கி கொள்ளுங்கள், அதுவும் வரி இல்லாமல் இறக்குமதி செய்து கொள்ளுங்கள் என்று நிர்பந்தம் செய்கிறார்.
ஆனால், இந்தியா 1989 ஆம் ஆண்டிலிருந்து மரபணு மாற்றம் செய்யப்பட்ட விவசாய பொருட்களை இறக்குமதி செய்ய மாட்டோம் என்ற கொள்கையில் இருக்கிறது. அதுமட்டுமின்றி, இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு உரம், மானியம், இலவச மின்சாரம் உள்ளிட்டவை கொடுத்த போதிலும், அவர்கள் இன்னும் அதிக லாபம் சம்பாதிக்க முடியாமல் இருக்கிறார்கள். எனவே, அமெரிக்காவில் இருந்து விவசாய பொருட்களை இறக்குமதி செய்தால், இந்திய விவசாயிகள் மிகப்பெரிய பாதிப்பை அடைவார்கள் என்பதால், பிரதமர் மோடி, “வேளாண் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாது, அதற்காக என்ன விலை கொடுக்கவும் தயார்” என்று தெரிவித்துள்ளார்.
இதுதான் டிரம்ப்புக்கு கோபத்தை ஏற்படுத்தி, இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. ஆனால், இந்த நெருக்கடி எல்லாம் சந்திக்கும் அளவுக்கு இந்தியாவுக்கு தைரியம் இருக்கிறது என்றும், இந்தியாவை எந்த நாடும் அசைக்க முடியாது என்றும் கூறப்பட்டு வருகிறது.அடாவடியாக செயல்படும் டிரம்ப் உலகத்தின் கண்களுக்கு கோமாளியாகவே தெரிகிறார் என்பது உண்மை.இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது ரஜினி நடித்த படத்தில் வரும் சிங்காரம் என்ன தொட்டிருக்கக்கூடாது என்ற வசனமே நினைவுக்கு வருகிறது.