போலீசாரை துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்ப முயன்றவர் கைது .

கோவை மே 15 கோவை காளப்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரு கோஷ்டிகளுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பை சேர்ந்த வாலிபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்து துப்பாக்கியை எடுத்துஎதிர்தரப்பினரை மிரட்டுவதற்காக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். துப்பாக்கிக் குண்டு சத்தம் கேட்ட பொது மக்கள் கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்..போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். இதில் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு மிரட்டியது சரவணம்பட்டி அருகே உள்ள ரத்தினகிரி வீதியைச் சேர்ந்த டிரைவர் ஹரிஸ்ரீ ( வயது 23) என்பதுதெரிய வந்தது. உடனே போலீசார் நேற்று அவரை கைது செய்தனர் .அவரிடம் போலீசார் விசாரணைநடத்தினர். விசாரணையில் காளப்பட்டி அருகே மது குடித்துவிட்டு ஹரிஸ்ரீ தனது இருசக்கர வாகனத்தை எடுக்க வந்தார். அப்போது அவருக்கும் திருச்சியை சேர்ந்த சக்திவேல் தரப்பினருக்கும் இடையே திடிரென்று மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஹரிஸ்ரீ தான் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை காட்டி மிரட்டியதுடன்,வானத்தை நோக்கி சுட்டதும் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக சக்திவேல் கோவில்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த நிலையில் ஹரிஸ்ரீ தன்னி டம் இருந்த நாட்டுத் துப்பாக்கியை காளப்பட்டி, செரையாம்பாளையத்தில் ஒரு இடத்தில் மறைத்து வைத்தது தெரிய வந்தது. இதை தொடர்ந்து கோவில்பாளையம் போலீசார் அந்த நாட்டு துப்பாக்கியை பறிமுதல் செய்ய சம்பவ இடத்துக்குஹரிஸ்ரீ யைநேற்று மாலை அழைத்துச் சென்றனர் .அப்போது மறைத்து வைத்திருந்ததுப்பாக்கியை ஹரிஸ்ரீ எடுத்துள்ளார். பின்னர் அவர் திடீரென்று போலீசாரை நோக்கி துப்பாக்கியால்சுட்டார். உடனே போலீசார் சுதாரித்துக் கொண்டு விலகி கொண்டதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.இதை எடுத்து ஹரிஸ்ரீ துப்பாக்கியுடன் தப்பி ஓடமுயன்றார். உடனே கோவில்பாளையம்காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தனது துப்பாக்கியை எடுத்து ஹரிஸ்ரீயின் இடது காலை நோக்கி சுட்டார். இதில் காயமடைந்து அவர் சுருண்டு விழுந்தார். உடனே போலீசார் அவரை மடக்கி பிடித்தனர்.அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குபோலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .இது பற்றி தகவல் அறிந்ததும் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர். கார்த்திகேயன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: – கைதான ஹரிஸ்ரீகோவையில் உள்ள ஒரு கண் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் தலைவராக வேலை பார்த்து வந்தார். இவர் மீது துப்பாக்கி வைத்திருந்ததாக பீளமேடு போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே வழக்கு உள்ளது. இந்த நாட்டு துப்பாக்கியை அவர் ஜார்கண்ட் மாநிலத்தில் வாங்கியதாக தெரிகிறது .அவருக்கு துப்பாக்கி வாங்க உதவி நபர்கள் யார்? வேறு யாருக்காவது துப்பாக்கி வாங்கி கொடுக்கப்பட்டுள்ளதா?என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில்போலீஸ் பிடியிலிருந்து தப்ப முயன்ற வாலிபரை போலீசார் காலில்துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.