போலி முகவரி கொடுத்து பாஸ்போர்ட் விண்ணப்பித்தவர் கைது..!

கோவை அருகே உள்ள வெள்ளலூர்,அன்னை மலை அம்மன் கோவில் வீதியில் வசிப்பவர் சிவக்குமார் ( வயது 56) இவர் வெளிநாடு செல்வதற்கு பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பித்திருந்தார். இவரது பாஸ்போர்ட் குறித்த விவரங்களை விசாரிப்பதற்காக போத்தனூர் காவல் நிலைய போலீஸ் ஏட்டு சுரேஷ் அவரது வீட்டுக்கு சென்றார். விசாரணையில் சிவக்குமார் இலங்கையை சேர்ந்தவர் என்றும் இவர் ஆலாந்துறையில் 2002 -ம் ஆண்டில் குடியிருந்து விசாலாட்சி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தது தெரிய வந்தது.இவர் போலியான முகவரி கொடுத்து பாஸ்போர்ட் விண்ணப்பித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை யடுத்து இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதுகுறித்து போத்தனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோக் குமார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்..