பொது இடத்தில் அனுமதியின்றி பட்டாசு வெடித்தவர் கைது..!

கோவை போத்தனூர், கார்மல் நகர் பகுதியைச் சேர்ந்தவர் முரளிதரன் ( வயது 38) இவர் நேற்று அங்குள்ள மேட்டூர், சீனிவாசாநகர், தபால் நிலையம் அருகே பொது இடத்தில் அனுமதி பெறாமல் பட்டாசு வெடித்தாராம். அப்போது அந்த வழியாக ரோந்து சுற்றி வந்த சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் அவரை கைது செய்தார். பட்டாசு பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.