கோவை மே 9 கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நரசிம்மன் நாயக்கன்பாளையம் பி. கே. டி. நகரை சேர்ந்தவர் ஆல்துரை. இவரது மனைவி வனிதா ( வயது 42) இவர்களது மகள் ரக்ஷனா பி. சி. ஏ. படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார் .இந்த நிலையில் வனிதாவுக்கு வீரபாண்டியை சேர்ந்த கௌரிசங்கர் என்பவர் மூலம் அங்குள்ள எல்.ஐ.சி. காலனியின் வசித்து வரும் ஜெயராமன் ( வயது 35 )என்பவர் அறிமுகமானார் .அவர் வனிதாவிடம் தனது உறவினர்கள் ஜெர்மனியில் இருப்பதாகவும் அவர்கள் மூலமாக அதிக சம்பளத்துடன் தங்கள் மகளுக்கு வேலை வாங்கி தருவதாகவும் கூறினார் .இதை நம்பிய வனிதா பல்வேறு தவணைகளில் ஜி.பி. மூலம் ரூ 1லட்சத்து 500 அனுப்பி வைத்தார். பல மாதங்கள் ஆகியும் வேலை எடுத்துக் கொடுக்கவில்லை.இந்த நிலையில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வனிதா பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் வழக்கு பதிவு செய்து ஜெயராமனை கைது செய்தார் .இவர் திருப்பத்தூர் மாவட்டம் ,ஆம்பூர் பக்கம் உள்ள குறும்பூரை சேர்ந்தவர் . இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0