4 வயது சிறுமியைஆசைவார்த்தை காட்டிபாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோ வில் கைது

கோவை ஜூலை 15 கோவை அருகே உள்ள பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் தனது தாய் மற்றும் தம்பியுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் கரூர் மாவட்டம், பூவராயம்பட்டி பகுதியைச் சேர்ந்த அஜய் (வயது 22) என்பவர் வேலை தேடி கோவை வந்தார். இவருக்கும் சிறுமியின் குடும்பத்திற்கும் நட்பு ஏற்பட்டது .பின்னர் அஜய் ஆசை வார்த்தை காட்டி சிறுமியை தன் வலையில் விழ வைத்தார் .இந்த நிலையில் அவரது வீட்டின் அருகே உள்ள உள்ள அஜய்யின் அறைக்கு சிறுமி அடிக்கடி சென்று வந்தார். அங்கு வைத்து சிறுமியை அஜித் பலாத்காரம் செய்துள்ளார் .இந்த நிலையில் அஜய் சிறுமியை கடத்தி வெளியூர் சென்று விட்டார் .இது குறித்து சிறுமியின் தாய் பெரியநாயக்கன்பாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார் . போலீசார் வழக்கு பதிவு செய்து செல்போன் சிக்னல் மூலம் வெளியூரில் சிறுமியுடன் தங்கி இருந்த அஜய்யை கைதுசெய்தனர்.இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுபெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டார்.